நீதித்துறை, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சட்ட ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான நடமாடும் சேவையானது 2023 டிசம்பர் 16 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நுவரெலியா சினி சிட்டா நகர மண்டபத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில்,
ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம், பதிவாளர் நாயகம் திணைக்களம், சட்ட உதவி ஆணைக்குழு, இணக்க சபை ஆணைக்குழு, இழப்பீட்டுக்கான அலுவலகம், காணாமல் போனோருக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவற்றின் சேவைகளை பொதுமக்கள் அணுகலாம்.
பதிவு செய்யப்படாத பிறப்புகளைப் பதிவு செய்தல், பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களைப் பெறுதல், தேசிய அடையாள அட்டைகளைப் பெறுதல், திருத்தங்களைச் சமர்ப்பித்தல் மற்றும் தவறான தேசிய அடையாள அட்டைகளின் இரண்டாவது நகல்களைப் பெறுதல், சட்ட உதவி சேவைகள், சமரச சபைகள் மற்றும் கடன் நிவாரண வாரியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
நுவரெலியா மாவட்டத்தின் ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு பிரஜையும் இந்த நடமாடும் சேவையில் பங்குபற்ற முடியும் என்பதுடன் நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட அவர்களின் பணிப்புரையின் பேரில் நுவரெலியா மாவட்ட செயலகம் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றது.நுவரெலியா மாவட்ட மக்கள் இச் சந்தர்ப்பத்தில் தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட வேண்டு கோள் விடுத்துள்ளார்.
மஸ்கெலியா நிருபர் – செதி பெருமாள்
