திருத்தம்! தவருக்கு வருந்துகின்றோம்!!
வேட்பாளர் ஒருவரே ஆதரவு! கட்சி ஆதரவு இல்லை!!
2024 பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தபால் உரை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த சமநில ஐக்கிய சுதந்திரக் கட்சி இதொகாவுக்கு ஆதரவளித்துள்ளது என இதொகா ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டிருந்தது.
இதொகா ஊடகப்பிரிவால் அனுப்பட்டிருந்த செய்தியை நாமும் பதிவிட்டிருந்தோம்.
ஆனால் சமநில ஐக்கிய சுதந்திரக் கட்சி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட்ட காத்தையா குனாலன் என்பவரே தமது ஆதரவாளர்களுடன் இதொகாவில் இணைந்துகொண்டுள்ளார் என்பதே உண்மை.
எனவே, சமநில ஐக்கிய சுதந்திரக் கட்சி இதொகாவுக்கு ஆதரவு என்ற செய்தி தவறு. அதற்காக வருந்துகின்றோம்.
………….
பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில், தபால் உரை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரங்களை மேற்கொண்டுவந்த சமநிலம் ஐக்கிய சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் தமது ஆதரவை இதொகாவுக்கு தெரிவித்துள்ளது.
சமநிலம் ஐக்கிய சுதந்திர கட்சியின் பிரதான வேட்பாளர் காத்தையா குனாலன் அவரின் ஆதரவாளர்கள் சகிதம் இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானை சந்தித்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போட்டியிலிருந்து தாம் விலகிக்கொண்டதாகவும், தொடர்ந்நது வரும் காலங்களில் இ.தொ.காவுடன் எமது பயணம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இதொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தேசிய அமைப்பாளர் ராஜதுரை, உபத்தலைவர் சச்சுதானந்தம் ஆகியோர் இனைந்துக் கொண்டார்கள்.
தகவல் – இதொகா ஊடகப்பிரிவு