நுவரெலியாவில் மேலும் 69 பேருக்கும், பதுளையில் 64 பேருக்கும் கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உடபுஸல்லாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36 பேருக்கும், வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, பதுளை மாவட்டத்தில் நேற்று 64 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles