நேபாள அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது இந்திய அணி

5 அணிகள் இடையிலான 13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்தது. இதில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட் அடிப்பதிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இந்திய கேப்டன் சுனில் சேத்ரி 49-வது நிமிடத்தில் முதலாவது கோல் அடித்தார். மொத்தத்தில் இது அவரது 80-வது சர்வதேச கோலாகும். இதன் மூலம் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சியை (80 கோல்) சமன் செய்தார்.

சேத்ரியை தொடர்ந்து சுரேஷ் வாங்ஜாம் (50-வது நிமிடம்), சஹால் சமாத் (90-வது நிமிடம்) ஆகியோரும் கோல் போட்டு அசத்தினர். 1993-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டியில் இந்திய அணி இந்த கோப்பையை வெல்வது இது 8-வது முறையாகும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles