நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -128 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது.

நேபாளத்தில் நேற்றிரவு 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்டதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன

நிலநடுக்கத்தினால் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக ஊடக தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.

Related Articles

Latest Articles