நைஜிரியாவின் வடக்கு நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிறார்கள் உட்பட 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவின் வடக்கே நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் இதில் பங்கேற்றனர். திருமணம் முடிந்து 300 இற்கும் மேற்பட்டோர் ஒரு படகில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மேலும் பலர் படகில் தங்களது பைக்குகளை எடுத்து வந்திருந்தனர். அப்போது அதிக பளு காரணமாக படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுவர்கள் உள்பட 103 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நடந்தது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் 100க்கு மேற்பட்டோரை மீட்டுள்ளனர். மேலும், மாயமான பலரை தேடி வருகின்றனர். திருமணத்துக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய மக்கள் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
