ஈரானைச் சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதிக்கு மேலும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டைச் சேர்ந்த 53 வயதான நர்கீஸ் முகமதி அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரானில் ஹிஜாப் அணியாததால் பொலிஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாஷா அமீனி (22) என்ற பெண் உயிரிழந்தார்.
இதையடுத்து, நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.இந்தப் போராட்டத்துக்கு நர்கீஸ் முகமதி சிறையில் இருந்தே ஆதரவு திரட்டினார். இதனால் அவரது புகழ் மேலும் அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 2023-ல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 19-வது பெண் மற்றும் ஈரானின் 2-வது பெண் என்ற பெருமையை நர்கீஸ் முகமதி பெற்றார்.
இந்நிலையில், கடந்த 2 அம் திகதியில் இருந்து அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தச் செயலுக்காக நர்கீஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஈரான் அரசு உத்தரவிட்டது .










