நோர்வூட் பொலிஸாரால் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றாமையும் இதற்கு காரணமாகும்.

இந்நிலையில் பொதுவெளியில் நடமாடும் மக்கள் முக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றுகின்றனரா என பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக முகக்கவசம் அணியாதவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் தலைமையில் இன்று (15) நோர்வூட் நகரில்,  முறையாக முகக்கவசம் அணியாத,  சமூக இடைவெளி பேணாத பொது மக்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

அத்துடன், நோர்வூட் நகரில் சுகாதார விதிமுறைகளுக்கமைய வர்த்தகத்தில் ஈடுபடாத வர்த்தகர்கள் மற்றும் பணி புரிபவர்கள் இதன்போது  பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் சுகாதார விதி முறைகளை மீறினால் கைது நிச்சயம் எனவும் அறிவிப்பு விடுத்தனர்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Related Articles

Latest Articles