நோர்வூட்டில் 200 லீற்றர் தாரை களவாடிய இருவருக்கு மறியல்

200 லீற்றர் ‘தார் பெரலை’ களவாடிச்சென்ற நிலையில் கைதுசெய்யப்பட்ட இருவரை எதிர்வரும் திங்கட்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

நோர்வூட் –  மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் 200 லீற்றர் ‘தார் பெரலை’ களவாடிச்சென்ற இருவர் நோர்வூட் பொலிஸாரால் கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். தாரை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதன்பின்னரே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ நிருபர் – எஸ். சதீஸ்

Related Articles

Latest Articles