காணாமல்போயிருந்த 4 வயது சிறுவன், நோர்வூட் டங்கள் வனப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்
லக்ஸபான பகுதியில் இருந்து டங்கள் தோட்டப்பகுதிக்கு திருமண நிகழ்வொன்றுக்காக பெற்றோர் சகிதம் குறித்த சிறுவன் சென்றுள்ளார்.
குறித்த குழந்தை விளையாடி கொண்டிருந்த நிலையில் தீடிரென காணாமல்போனதையடுத்து 17.06.2024 நேற்று மாலை நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டுக்கமைய பொலிஸாரும் பொதுமக்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமரா காட்சிகளின் உதவியோடு குழந்தை மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சிறுவன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்










