பகிடிவதை உள்ளிட்ட துன்புறுத்தல்களை தடுக்க விசேட செயலணி

பகிடிவதை உள்ளிட்ட அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் தடுப்பதற்காக செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவினால் 16 பேர் கொண்ட இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கமைய இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பகிடிவதைகளை இதன்மூலம் ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத்தவிர மாணவர்களுக்கு ஏனைய மாணவர்களால், நிறுவன முகாமைத்துவத்தினால் அல்லது வேறுதரப்பினரின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான துன்புறுத்தல்கள் மற்றும் அந்த தரப்பினரால் பேராசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் ஆகியவற்றையும் தடுப்பது இந்த செயலணியின் நோக்கமாகும்.

விரைவில் இந்த செயலணியின் கீழ் பல்கலைக்கழக மட்டத்திலும் ஏனைய உயர்கல்வி நிறுவன மட்டத்திலும் பிரிவுகளை நிறுவுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles