போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட பங்களாதேசின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் நடந்த அறகலயவின்போது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு எதிராக சட்டம் அமுலாவதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என கேள்வி எழுப்பட்டுள்ளது.
அறகலயவின்போது வன்முறைக்கு வழிசமைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும், நாட்டை அறகலயவரை அழைத்து வந்தவர்கள் தண்டிக்கடுவார்கள் எனவும் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்த விடயத்தை சுட்டிக்காட்டியே, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது , அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இவ்வாறு கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்.
“ விசாரணைகள் முடிவடைந்து சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இனி நீதிமன்றம்தான் தீர்ப்பு வழங்க வேண்டும். உரிய நீதி கிடைக்கும் என நம்புகின்றோம்.” என்றார்.
