பசறை சுகாதார பிரிவில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று

பசறை பொது சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இருபது பேருக்கு (இன்று) 29-06-2021  கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என பசறை பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். ஜெயகுமார் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும்  இன்றைய தினமே    பிந்துனுவௌ மற்றும் பதுளை மெரிகோல்ட் கட்டிடத்தொகுதி கோவிட் 19 தொற்று சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கு, ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பசறைப் பகுதியின் கோணக்கலை பெருந்தோட்டம் மற்றும் கிராமம் ஏழுபேர், பங்கு பெருந்தோட்டப் பிரிவு – ஆறுபேர், கனவரல்லை பெருந்தோட்ட சி.வி.ஈ. பிரிவு ஐந்து பேர், டெமேரியா பெருந்தோட்டத்தில் இருவர் என்ற வகையில் இருபது பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று முன்தினம் 27-06-2021ல் மேற்படி பகுதிகளில் 113 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை 29-06-2021ல் முற்பகல் 9.30 மணியளவில் வெளிவந்தது. அவ் அறிக்கையிலேயே, மேற்கண்ட 20 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.

Related Articles

Latest Articles