பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பசறை பொது சுகாதார பரிசோதகர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மஹதோவ தொழிற்சாலை பிரிவில் நேற்றைய தினம் 106 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 25 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அத்துடன் பசறை பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளில் 9 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
