பசறை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 49 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பசறை மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஜெயகுமார் தெரிவித்தார்.
மேற்படி பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் அடிப்படையில் 38 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
பசறை பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன்ட் பரிசோதனையில் 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.