– ராமு தனராஜா
பசறை கனவரல்ல கீழ் பிரிவில் நேற்று (27/09) வீசிய கடும் காற்றின் காரணமாக வீடொன்றின் கூரை முற்றாக சேதமடைந்துள்ளது.
இதன்போது அவ்வீட்டில் வசித்தவர்கள் நேற்றிரவு அயலில் இருந்த உறவினர்கள் வீட்டிலையே தங்கியிருந்தனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது அவ்விடத்திற்கு கிராம உத்தியோகத்தர் , பசறை பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், தோட்ட நிர்வாகம் , மற்றும் பசறை பிரதேச சபை உறுப்பினர் ஈசன் ஆகியோர் அவ்வீட்டை சென்று பார்வையிட்டனர்.

இன்றைய தினம் வீட்டை சிர்த்திருத்துவதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக பசறை பிரதேச சபை உறுப்பினர் திரு ஈசன் தெரிவித்தார்











