பசறையில் கஞ்சாவுடன் இளைஞர் கைது!

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை, பூல்வத்தை பகுதியில் கஞ்சா சகிதம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பசறை பூல்வத்தை பகுதிக்கு விரைந்து சந்தேகத்துக்கு இடமான நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் இருந்தது 58500 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

நிருபர் – ராமு தனராஜ்

Related Articles

Latest Articles