பச்சை, சிவப்பு யானை குட்டிகள் ஓர் அணியாம்: சஜித் கண்டுபிடிப்பு!

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகுவார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து அமைகின்றது. பச்சை யானை குட்டிகளும், சிவப்பு யானை குட்டிகளும் இன்று ஒன்றாக சேர்ந்து இருக்கின்றது.

இதனூடாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெற்றி பெற முடியாது என்பது வெளிப்படையாகியுள்ளது. எனவே உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் நாட்டை கட்டி எழுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கும் வாக்களிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி காரர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 34 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் மினுவாங்கொடையில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

வங்குரோத்தடைந்த நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான நிதி திரட்டப்பட வேண்டும். 76 வருட வரலாற்றை மாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி ஆயிரம் மில்லியன் பெறுமதியான சேவைகளை நாட்டுக்காக செய்திருக்கின்றது. கல்வித் துறையையும் சுகாதாரத் துறையும் மேம்படுத்துவதற்காக சேவைகளை செய்திருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்காக சேவை செய்தபோது அநுரவும் ரணிலும் அச்சமடைந்தார்கள். நாம் சேவை செய்யும்போது அவர்கள் அதனை பரிகாசித்தார்கள். இந்த பரிகாசங்கள் காரணமாக இன்று நாடு வங்கரோத்தடைந்திருக்கிறது. எனவே இந்த அரசாங்கமும் மக்கள் விடுதலை முன்னணியும் சொல்கின்ற பொய்களை நம்பி ஏமாற வேண்டாம்.

ரணிலுக்கும் அனுரவுக்கும் நினைக்க முடியாத அளவு நிவாரணத் தொகையை இந்த நாட்டுக்கு கொண்டு வருவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். அவை கடன் அல்ல அது நிவாரணமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது குறிப்பிட்டார்.

 

Related Articles

Latest Articles