ஐரோப்பா நோக்கிச்சென்ற மேற்கு ஆபிரிக்க அகதிகள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் 63 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டைச் சேர்ந்த அகதிகள் 63 பேர் ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கி கப்பலில் புறப்பட்டனர். இந்த படகு கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
தகவலறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் 56 உடல்களை மீட்டனர். மேலும் 7 பேரின் உடல்களை தேடி வருகின்றனர் என ஐ.நா.வின் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது. அளவுக்கு அதிகமான பயணிகளுடன் செல்லும் படகுகள் கவிழ்ந்து ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
கேனரி தீவுகளை அடையும் முயற்சியின்போது கடந்த வருடம் மாத்திரம் 559 அகதிகள் பலியாகியுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம் 126 புர் உயிரிழந்துள்ளனர். 15 படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.










