பட்ஜட் தொடரில் பதவிதுறப்பு புத்தாண்டில் பதவியேற்பு

ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கடந்தவாரம் பஸில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இதன்போது கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

இதன்போது கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து பஸில் ராஜபக்ச விவரித்துள்ளார்.

குறித்த மின் திட்டமானது இலங்கைக்கு மிகவும் முக்கியம், இதன்மூலம் குறைந்த விலையில் மின்சாரத்தை பெறமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனமொன்றே முதலிட வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, ஆந்தைகள்போல இரவில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதாக சிலர் விமர்சிக்கின்றனர். என்னை இரவில் கைது செய்து சிறையில் அடைக்கும்போது இது பற்றி அவர்கள் கதைக்கவில்லை. அதற்காக நாம் பழிதீர்க்கவும்மாட்டோம். ஏனெனில் நாம் மனித நேயத்துடன் செயற்படுபவர்கள் எனவும் பஸில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அடுத்ததாக 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கே கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என்பதுடன், மக்களுக்கு சுமை இல்லாத பட்ஜட்டாகவே அது அமையுமு; எனவும் பஸில் விவரித்துள்ளார்.

Related Articles

Latest Articles