பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்தார் குமார வெல்கம!

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஆளுங்கட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

இடைக்கால வரவு – செலவுத் திட்டம்மீதான வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது வாக்கெடுப்பில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விலகி இருந்தனர். எனினும், அக்கட்சி எம்.பியான குமார வெல்கம பாதீட்டை ஆதரித்து வாக்களித்தார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் இருந்து நழுவியது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்த்து வாக்களித்தது. தேசிய மக்கள் சக்தியின் மூன்று எம்.பிக்களும் எதிராகவே வாக்களித்தனர்.

Related Articles

Latest Articles