பண்டாரவளையில் மணமக்களுக்கு கொரோனா – 127 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்

பண்டாரவளை எல்ல – கித்தல்எல்ல பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலொன்றில் கடந்த 24, 25 ஆம் திகதிகளில் திருமண வைபவமொன்று நடைபெற்றுள்ளது. திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட மணமகனுக்கும், மணமகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மணமகளின் தாயும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 125 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பண்டாரவளை அம்பேகோட பகுதியில் 5 பேருக்கு இன்று (28/04) தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles