ஜனாதிபதி பதவி மோகத்தால் அமைச்சு பதவியை துறந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் முடிவை இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததையிட்டு நான் வரவேற்கின்றேன். குறிப்பாக அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகவே இந்த அமைச்சுப் பதவி இராஜினாமாவை மேற்கொண்டுள்ளார் என்பது நாட்டு மக்கள் அறிந்த விடயம்தான்.
எவ்வாறாயினும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தருணத்தில் அமைச்சுக்கள் சார்ந்த வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியாது.
எனவேதான், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆளும் கட்சி சார்ந்தவர்களாகவோ எதிர்க்கட்சியினை சார்ந்தவர்களாகவோ அல்லது சுயாதீன வேட்பாளர்களாகவோ இருப்பினும் தனது அமைச்சு பொறுப்பிலிருந்து விலகி தேர்தலில் போட்டியிடுவதினை நான் வரவேற்கின்றேன் அதேவேளை வெற்றிப்பெறவும் வாழ்த்துகின்றேன்.” – என்றார் ஜீவன்.