‘பதவி விலக வேண்டியது அதிகாரிகள் அல்ல, அமைச்சர்களே’ – பாகுபலி பாணியில் கபீர் ஹாசீம் வலியுறுத்து

” தற்போதைய சூழ்நிலையில் அரச அதிகாரிகள் அல்ல, அமைச்சர்களே பதவி விலகவேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்நாட்டில் எவ்வளவு எரிபொருள் கைவசம் உள்ளது, எப்போது மின்சாரம் துண்டிக்கப்படும் உள்ளிட்ட தகவல்களை தொழிற்சங்க பிரமுகர்களே நாட்டுக்கு தெளிவுப்படுத்திவருகின்றனர். அமைச்சர்கள் மௌனம் காக்கின்றனர். அவர்களுக்கு வெட்கம் இல்லை. எனவே, பதவி விலக வேண்டியது அரச அதிகாரிகள் அல்ல, அமைச்சர்களே என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.” – என்றார்.

அதேவேளை, இந்த அரசுக்கு நாட்டில் என்ன நடக்கின்றது என தெரியவில்லை. மக்களிடம் தியாகம் செய்யுமாறு கோருகின்றனர். நாட்டை நிர்வகிக்கமுடியாத அரசு, ஏன் பதவியில் இருக்க வேண்டும் – என்று ஜே.வி.பி. இன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Latest Articles