களனி பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தனக்கு தொடர்பிருக்கின்றது என்பது நிரூபிக்கப்படுமானால் அமைச்சு பதவியை துறப்பதற்கு தயார் – என்று இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.
” இன்று காலைதான் மேற்படி சம்பவம் தொடர்பில் எனக்கு தெரியவந்தது. தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வாகனமொன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவரும் ஈடுபட்டுள்ளார். எனவே, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது விடயத்தில் நான் பின்நிற்கமாட்டேன்.
அத்துடன், இச்சம்பவத்துடன் எனக்கு தொடர்பிருக்கின்றது என சிலர் கூறுகின்றனர். அதனை நிரூபித்தால் நான் அமைச்சு பதவியில் இருந்து விலகுவேன்.
இது தொடர்பில் நியாயமான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
