இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (21) நடைபெறுகின்றது.
ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்த நியூசிலாந்து அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.
அடுத்த மாதம் -7 ஆம் திகதிதொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இவ்விரு அணிகளும் விளையாடும் கடைசி தொடர் இதுவாகும்.
இதனால் இது உலகக் கோப்பை போட்டிக்கு ஒத்திகையாகவே பார்க்கப்படுகிறது.
சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை முதல்முறையாக பறிகொடுத்த இந்திய அணி, அதற்கு 20 ஓவர் போட்டியில் பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.










