பதுலு ஓயா ஆற்றுக்குள் வீழ்ந்து கார் விபத்து

பண்டாரவளை – பதுளை வீதியின் உடுவர பிரதேசத்தில் இன்று (08) காலை காரொன்று, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த காரே இவ்வாறு வீதியை விட்டு விலகி  பதுலுஓயா ஆற்றில்  விழுந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

கார் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால், கார் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக  பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles