பதுளை- பசறை பிரதான வீதியில் 2 ம் கட்டை பகுதியில் கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
பதுளையில் இருந்து பசறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கெப் ரக வாகனம், இவ்வாறு வீதியை விட்டு விலகி, மரக்கறி கடையுடன் மோதியுள்ளது.
விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மரக்கறி கடை சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பில் பதுளை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
