பதுளை, பாலாகம பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளது. இவ்வனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
வீட்டில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த வேளை குறித்த சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததாக பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், அடுப்பு சேமடைந்துள்ளது.
ராமு தனராஜா










