மஹியங்களை – பதுளை வீதியில் தம்பராவ விகாரைக்கு அருகாமையில் ஆட்டோவும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயதுடைய ஊரணி பகுதியை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மேலும் மூவரில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இருவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மஹியங்கனை பொலிஸிர் தெரிவித்தனர்.
இதன் போது காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சாரதியை மஹியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா










