பதுளை, மஹியங்கனை வீதியில் விபத்து: ஐவர் காயம்!

பதுளை – மஹியங்கனை வீதியில் கரமட்டிய பகுதியில் இன்று (25) பயணித்த இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் காயமடைந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரமட்டிய ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மிகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறினர். இரண்டு லொறிகளும் பலத்த சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனராஜா டிமேஷன்

Related Articles

Latest Articles