பதுளை மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 38 ஆயிரத்து 621 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சுமார் 20 ஆயிரம் வாக்குகளில் , 2 ஆம் இலக்கத்துக்கு புள்ளடியிடப்பட்டிருந்ததாக வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கட்சி பிரமுகர்கள் தெரிவித்தனர். பதுளை மாவட்டத்தில் மொட்டு சின்னத்தில் 2 ஆம் இலக்கம் செந்தில் தொண்டமானின் விருப்பு இலக்கமாகும்.
எனவே, பதுளை மாவட்டத்தில் சுமார் 38 ஆயிரம் வாக்குகளைப்பெற்றிருந்த ஆளுங்கட்சி தமிழ் வேட்பாளர் செந்தில் தொண்டமான், பாராளுமன்றம் தெரிவாகாமல் இருப்பதற்கு மேற்படி நிராகரிக்கப்பட்ட வாக்குகளும் ஓர் பிரதான காரணமாகும்.
பதுளை மாவட்டத்துக்கு ஆசனமொன்று அதிகரிக்கப்பட்டு 9 பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் வாய்ப்பு இருந்ததால், செந்திலுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. எனினும், சில சுயேட்சைக்குழுக்கள் வாக்குகளை சிதறடித்தமை, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் என்பன உட்பட சில காரணிகள் அவரின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தின.
நிராகரிக்கப்பட்ட 38 ஆயிரம் வாக்குகளும், சிற்சில தவறுகளாலேயே நிராகரிக்கப்பட்டிருந்தன. எனவே, வாக்களிப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 668,166
அளிக்கப்பட்ட வாக்குகள் – 537,416
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 38,621
செல்லுப்படியான வாக்குகள் – 498,795