பதுளை மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக இடைக்கிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக எல்ல, பசறை, ஹாலிஎல மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை தேசிய கட்டிடப் பொருள் ஆய்வு திணைக்களம் விடுத்துள்ளது.

இவ்வனர்த்த எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் அதேவேளை மாவட்டத்தின் எல்ல, பசறை, நமுனுகுல, பண்டாரவளை மற்றும் அப்புத்தளை ஆகிய பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவி வருகிறது.

மிதமான வெயில் சில இடங்களில் காணப்பட்டாலும் கடும் குளிர் நிலவி வருகிறது. இன்றும் மாலை வேளையில் மழை பெய்யும் வானிலையே காணப்படுகிறது.

பசறை நிருபர்

Related Articles

Latest Articles