பதுளை ரயில் நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

ராமு தனராஜ்

பதுளை ரயில் நிலையத்தினுள் ஐஸ் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே இக்கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரிடமிருந்து 110 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 8 பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Related Articles

Latest Articles