பதுளை மாவட்டத்தின் பொரலந்தை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுள் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் மொத்தமாக 91 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்குற்படுத்தப்பட்டவேளையில் 21 மட்டுமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, இவ் 21 பொலிஸ் உத்தியோகத்தர்களும், கஹாகொல்லை கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்திற்கு இன்று (11-11-2020) கொண்டுச் செல்லப்பட்டனர். ஏனைய 70 பொலிசாரும், பொரலந்தை பொலிஸ்பயிற்சிப் பாடசாலையிலேயே, தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றதாக, அப்பகுதி பொதுசுகாதாரப் பிரிவினர் மேலும்தெரிவித்தனர்.
எம். செல்வராஜா,