பதுளையில் புதையல் தோண்டியவர் கைது!

பதுளை ஸ்பிரிங்வெளி பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்குமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பெருந்தோட்டத்திற்கு சொந்தமான வனப்பகுதியில் புதையல் தோண்டிய 60 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பிரிங்வெளி ப்ளொக் 5 நல்லமல பகுதியை சேர்ந்த 60 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று புதன்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles