பதுளை, லோவர் வீதி சிறைச்சாலைக்கு அருகாமையில் பாரிய மரமொன்று இன்று மதியம் வீதியின் குறுக்கே முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன், மூன்று ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளன.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், மின்சார அமைப்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த போது, திடீரென இந்த மரம் வீதியின் குறுக்கே விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் அனல்மின் நிலைய ஊழியர் எனவும், மரம் முறிந்து வீழ்ந்ததில் பல மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்களும் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை மாநகர தீயணைப்பு பிரிவு, பதுளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு மற்றும் மின் நிலைய ஊழியர்கள் இணைந்து சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வீதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்
