பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் நான்கு பொலிஸார் கொரோனா வைரஸ் தொற்றுக்கிழக்காகியுள்ளமை தெரியவந்துள்ளது.
கடந்த 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை 25-03-2021ல் (இன்று) வெளியானபோது, மேற்படி கொவிட் 19 தொற்று நிலை உறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்று குறித்த தகவல் கிடைத்ததும், கந்தகெட்டிய பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி டபள்யு. எம். சிரிவர்தனவுடன் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்று வினவியபோது,
அதற்கு அவர், கொவிட் – 19 தொற்றுக்கிழக்கான நான்கு பொலிசாரில் ஒருவர் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர். ஏனைய மூவரும் விடுமுறையில் இருந்தவர்கள். ஆகையினால், இந் நால்வரும் மக்களுடனோ, ஏனைய பொலிசாருடனோ நெருங்கிப் பழகக்கூடிய சந்தர்ப்பமற்றவர்கள். ஆகையினால், பொலிஸ் நிலையத்தை மூட வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், பொது சுகாதாரப் பிரிவினர் எடுக்கும் முடிவிற்கு இணங்குவோம்” – என்று கூறினார்.
எம். செல்வராஜா, பதுளை