பண்டோரா ஆவணம் அம்பலம் – மொட்டு கட்சி வெளியிட்ட அறிவிப்பு

” முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு மற்றும் நிதி பதுக்கலில் எவராவது ஈடுபட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் சட்டம் உரிய வகையில் செயற்படும்.” – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” தனிப்பட்ட நபரென்பதால், இது விடயத்தில் அரசு எவ்வாறு தலையிடும் என்பது தொடர்பில் எடுத்த எடுப்பிலேயே குறிப்பிட முடியாது. எவரேனும் முறையற்ற விதத்தில் நிதி பதுக்கியிருந்தால், நாட்டில் சட்டம் உள்ளது. அதன் பிரகாரம் நடவடிக்கை இடம்பெறும். நபர்கள் முக்கியம் அல்ல. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே முக்கியம். ” – என்றார்.

Related Articles

Latest Articles