பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பப்புவா நியூ கினியாவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் இரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் ஆஸ்திரேலியா அருகே தீவு நாடான பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது. இங்கு அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கிம்பேயிலிருந்து தென்கிழக்கே 197 கிலோமீட்டர் தொலைவில், 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளதால் பசிபிக் பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு 30 நிமிட கழித்து, அதே பகுதியில் இரண்டாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அண்மையில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles