நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், கொழும்பிலிருந்து மிகவும் சூட்சுமமான முறையில் கம்பளைக்கு ஹெரோயின் கடந்திய நபரொருவர் கம்பளை பொலிஸாரால் நேற்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவரிடமிருந்து 3 கிராம் 500 மில்லிகிராம் ஹேரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கம்பளை, கங்கவட்ட பகுதியில் வசிக்கும் 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து எவ்வாறு ஹெரோயின் கடத்தப்பட்டுள்ளது, எவ்வளவு காலம் விற்பனை செய்ப்பட்டுவந்துள்ளது, இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் என்பன உள்ளிட்ட விடயங்களைக் கண்டறிவதற்காக கம்பளை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கம்பளை நிருபர் – லாவண்யா


