பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்!

நாட்டில் கடும் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது.

அரசுக்கான ஆதரவு குறைந்துவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் 113 என்ற சாதாரண பெரும்பான்மை பலமும் ஊசலாடும் நிலையிலேயே உள்ளது.

ஆளுங்கட்சியில் இருந்து விலகி பலர் இன்று எதிரணியில் அமரக்கூடும் என்பதால் இன்றைய நாடாளுமன்ற அமர்வு முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.

அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை தக்கவைத்துக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம். எனினும், இதனை தோற்கடிப்பதற்கு எதிரணிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

Related Articles

Latest Articles