கல்விப் பொதுத்தராதார சாதாரண தர பரீட்சை தொடர்பான கல்வி நடவடிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்துவதற்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விதிமுறைகள் மீறப்படும் நிலையில், அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்விப் பொதுத்தராதார சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.