பல கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு – நடுக்கடலில் ஐவர் கைது

200 கிலோகிராமிற்கும் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருள்களுடன் 05 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் (PNB) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள்களின் பெறுமதி 4,000 மில்லியன் ரூபா என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினும் இன்று (22) காலை தொன்றா முனை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles