பலத்த காற்று – பசறை பாடசாலைக்கு இன்று விடுமுறை

பதுளை மாவட்டத்தின் பசறை, லுனுகலை, மடுல்சீமை, நமுனுகுல உட்பட பல பகுதிகளில் நேற்று பிற்பகல் வேளைத் தொடக்கம் வீசி வரும் கடும் காற்றின் காரணமாக மக்கள் குடியிருப்புகள்,பாடசாலைகள், பொது கட்டிடங்கள் என பலவற்றிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

காற்றின்  காரணமாக பாரிய மரங்கள் வீதிகளிலும், வீடுகளிலும் விழுந்துள்ளன.காற்று தொடர்ந்து வீசுவதால்  சேதம் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகின்றது.

லுனுகலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஹொப்டன் உட்பட பல பகுதிகளில் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகள், பாடசாலைகள் என்பன பகுதி அளவிலும் முழுமையாகவும் சேதமடைந்தள்ளன.

இப்பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக நேரடி கள ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவிக்கின்றார்.

இதேவேளை பசறை கல்வி வலயத்தில் அனர்த்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ள பாடசாலைகளுக்கு இன்று (08) முற்பகல் 11.00மணிக்கு விடுமுறை  வழங்கி பாடசாலை மாணவர்களை பாதுகாப்பான  முறையில் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு ஊவா மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் டப்ளியூ.ரந்தெனிய பசறை வலயக் கல்விக் காரியாலயத்தின் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles