பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெயிகஸ்தலாவ பிரதேசத்தில் தனியார் காணியில் இருந்து ஆணொருவரின் இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்கு பொது மக்களின் உதவியை காவற்துறையினர் கோரியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எப்.எம். அலி
