தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நடத்துமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, புதிய நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோதே ரணில் விக்கிரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்தார்.
அத்துடன், போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதற்கும் அவர் எதிர்ப்பை வெளியிட்டார்.










