பஸிலின் சைக்கிள் சவாரி – சபையில் அம்பலப்படுத்தினார் டிலான்

” கம்பியில் சைக்கிள் சவாரி செய்வதுபோல, இக்கட்டான சூழ்நிலையாக இருந்தால்கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதீட்டை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார்.”- என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா புகழாரம் சூட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீட்டுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு புகழாரம் சூட்டினாரம்.

” கொரோனா பெருந்தொற்றால் முழு உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லா துறைகளும் ஸ்தம்பித்துள்ளன. இந்நிலையில் இருந்து மீள்வதென்பது சவாலுக்குரிய விடயமாகும். இக்காலப்பகுதியில் பயணிப்பதென்பது கம்பிமீது சைக்கிள் சவாரி செய்வதுபோன்றதாகும். நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களுக்கு பாரிய சுமைகளை திணிக்காத, இருப்பவர்களிடமிருந்து வரிகளை அறவிடும் பாதீட்டை நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம்.

2022 ஆம் ஆண்டிலாவது அரசியல், கட்சி, இனம், மத பேதங்களை மறந்து இலங்கையர்களாக செயற்படுவோம். அப்போதுதான் முன்னோக்கி பயணிக்கக்கூடியதாக இருக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles