புத்தளம் – கொழும்பு வீதியில் மாதம்பை இரட்டைக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். 15 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இபோச பஸ்ஸொன்றும், சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.