பஸ்ஸில் பயணித்த மாணவி இரும்பு கம்பி குத்தி படுகாயம்!

பலாங்கொடை, வெலிகேபொல பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ்மீது அதே வீதியில் இரும்பு கம்பிகளை ஏற்றி பயணித்த லொறி ஒன்றில் இருந்து இரும்பு கம்பிகள் பேருந்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உட்புகுந்ததில் மாணவியொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த பஸ்ஸில் பயணித்த இம்முறை சாதாரணதரப் பரீட்சை எழுதும் மாணவியொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

மாணவி கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரிட்சை எழுதி விட்டு வீடு திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. nவிபத்தில் மாணவியின் கழுத்து மற்றும் முகத்தில் கம்பிகள் குத்தியதில் மாணவி பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பஸ் மற்றும் லொறி ஆகியவற்றின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
எம்.எப்.எம். அலி

Related Articles

Latest Articles